திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா- 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா- 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் சேர்மன் சரவணன் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய  பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் ஸ்ரீ காந்தா ஜாவர் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி இயக்குனர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு   பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். 

அதன் பிறகு குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற அனைத்து வகுப்பு குழந்தைகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர் அதன் பிறகு அனைத்து பொது மக்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/