பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம்  மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், முன்னதாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்த முகாமில் காது மூக்கு தொண்டை வயிறு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும்  இருதய நோய், கருப்பை வாய் புற்றுநோய், பால்வினை நோய், எலும்பு. மூட்டு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் சித்த மருத்துவ சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்பட்டது. 



இந்த முகாமில் பொது மக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து  பெட்டகங்கள் வழங்கப்பட்டது, இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ் ராஜேந்திரன் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மாவட்ட மகளிர் அணி தலைவர் கவிதா தண்டபாணி  ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர்  சத்தியா ஜோலார்பேட்டை பேரூராட்சி தலைவர் மற்றும் கட்சி பிரமுகர்கள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/