வெலக்கல்நாத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

வெலக்கல்நாத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பி.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் பகுதியில் சேர்ந்த சக்திவேல் இவருடைய ஏழு வயது குழந்தை மோனிகா நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் வெலக்கல்நாத்தம்  பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் என்பதால் பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்து அனுப்பி உள்ளனர். இதன் காரணமாக இன்று பெற்றோர்கள் மாத்திரையை உடைத்து ஏழு வயது சிறுமி மோனிகாவுக்கு கொடுக்க முற்பட்டபோது அந்த மாத்திரையில் கம்பி இருந்தால் அதிர்ச்சி அடைந்தனர்.


மேலும் இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இன்று அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து முற்றுகையிட்டனர் இதனால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இதனை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மேலும் இது குறித்து புகாரின் பேரில் செந்தில்குமார் பாராசிட்டமில் மருந்து பெட்டகத்தில் இருந்து அனைத்து மாத்திரைகளையும் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது என வெலக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் அனு அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். இதன் காரணமாக பரபரப்பு காணப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/