திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளதை பரிசோதிக்கும் விதமாக ஒத்திகை பயிற்சி அரசு தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
தற்போது சில வாரங்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான ஒத்திகை பயிற்சி மூன்று விதமாக நடைபெற்றது. லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் , இரும்பல் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கான சிகிச்சை முறைகளும் கடுமையான மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை உள்ளிட்ட ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் தேவையான அளவு பாதுகாப்பு கவச உடைகள் முக கவசங்கள் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவகுமார் தெரிவித்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:
Post a Comment