இந்நிலையில் லிங்க கவுண்டர் மகன்கள் அனுபவிதிலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் 2.5 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என கூறி கடந்த சில ஆண்டுகளாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று லிங்ககவுண்டரின் மூத்த மகன் முன்னாள் ராணுவ வீரர் காசிநாதனை குணசேகரன் அவரது மகன் முரசொலி மாறன் மற்றும் அவருடைய மனைவி கலையரசி மூவரும் சேர்ந்து மண்வெட்டி மற்றும் கடுமையான ஆயுதங்களால் தாக்கியதாகவும்.

அதை தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் இதுவரை திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் தன்னுடைய வழக்கை எடுக்கவில்லை விசாரிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார். தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் குணசேகரன் குடும்பத்தார் ஆபத்து உள்ளது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment