கோட்டை தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமய நல்லிணக்க ரமலான் நோன்பு திருவிழா! கலெக்டர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

கோட்டை தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமய நல்லிணக்க ரமலான் நோன்பு திருவிழா! கலெக்டர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோட்டை தெரு பகுதியில் உள்ள ajb திருமண மண்டபத்தில்  காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹேப் அவர்களின் 51 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சமய நல்லிணக்க ரமலான் நோன்பு திறப்பு விழா மற்றும் பள்ளிகளுக்கு பயன்படும் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஜிபேர் அஹமத் தலைமை வகிக்க முகமது கலிம் முன்னிலை வகித்தார், இதில் சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா, இஸ்லாமியர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/