இந்நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞரும் தமிழின தலைவருமான டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது குறித்தும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பூத் கமிட்டி அமைத்தல் கழகத்தின் ஆக்க பணிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது. மேலும் நாற்றம்பள்ளி மேற்கு ஒன்றிய பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் பேரூர் கழக செயலாளர் உமா சந்திரன் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சாமுடி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிங்காரவேலன் தொகுதி பொறுப்பாளர்களான தலைமை செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார் பொதுக்குழு உறுப்பினர் சமண்ணன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment