திருப்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 April 2023

திருப்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.


அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களை பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்ஙப்பட்டது செல்லும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு 10நாட்களுக்குள் அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து முடிவு எடுக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது.

நாளை கெடு உள்ள நிலையில் இன்று தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியார் அங்கீகரிக்கப்படுவதாக அறிவித்தது. இதனால் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அதிமுக சார்பில்  நகர கழக செயலாளர் டி.டி.குமார் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர்.திருப்பதி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.



- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/