காவல் படை பயிற்சி நிறைவு விழா திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 April 2023

காவல் படை பயிற்சி நிறைவு விழா திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஊர் காவல் படை (பெண்கள்-2 ஆண்கள்-14) ஆளிநர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு. நேற்று 01.04.2023 ம் தேதி காலை பயிற்சி நிறைவு விழா திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து இன்று 02.04.2023 தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினரின் முதல் ஆண்டுவிழா திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் முன்னிலையில் வேலூர் சரக படைத்தளபதி திரு.சுரேஷ்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் ஊர் காவல் படையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு  பரிசுகளை வழங்கி பாராட்டினார் மேலும் ஊர்க்காவல் படை பணியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.     


இவ்விழாவிற்கு திருப்பத்தூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில், ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விநாயகம் ஆயுதப்படை ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் ஊர் காவல் படைத் தளபதி திரு. வெங்கடேசன் துணை தளபதி திரு.சத்திய பாலாஜி, மாவட்டத்திலுள்ள அனைத்து ஆண் மற்றும் பெண் ஊர் காவல் படையினர் தங்களது குடும்பத்துடன் விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/