திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே இரவு இரண்டு இரு சக்கரம் வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி.
பெரியகரம் பகுதியை சேர்ந்த தனுஷ் மற்றும் சரத்குமார் இருவரும் புதுப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிரே புதுப்பேட்டை பகுதியைச் சார்ந்த நெடுஞ்செழியன் தனது இரு சக்கர வாகனத்தில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் தனுஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தனுசுடன் பயணம் செய்த சரத்குமார் மற்றும் எதிர் திசையில் வந்த நெடுஞ்செழியன் ஆகியோர் படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனலயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment