தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருப்பத்துார் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நேரு தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர்கள் அருண்மொழிவர்மன், பிரேம்குமார், திருமால், மாவட்ட இணைச் செயலாளர் இளையராஜா, மாநிலத் துணைத் தலைவர் திருவேரங்கன் ஆகிய முன்னிலை வகித்தனர். இதில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நிலையில் பணிபுரியும் ஊழியர்களை இரவு 8.30 மணிக்கு மேலும் பணிபுரிய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட துணை தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment