திருப்பத்தூர் மாவட்டம் தமிழக பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அவர்களை தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் வீசிக ரவுடிகளை தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேடும் திருமாவளனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி பட்டியல் அணி மாவட்டத் தலைவர் ஏ. கோவிந்தராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் .
திருப்பத்தூரில் வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் மாவட்ட துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் திருப்பத்தூர் நகர தலைவர் மற்றும் பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் மாவட்ட துணைத் தலைவர்கள் மாவட்ட செயலாளர் மண்டல தலைவர்கள் மற்றும் காவி சொந்தங்கள் கலந்துகொண்டனர்.
நாட்றம்பள்ளி பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- ஆம்பூர் செய்தியாளர் கௌதம் கார்த்திக்.

No comments:
Post a Comment