இவர் கடந்த 25ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார், அப்போது குரும்பகேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சோமலாபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை பழுது பார்க்க தமிழ்ராஜ் டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் மீது ஏறி உள்ளார். அவரிடம் மின்சாரம் துண்டித்து விட்டதாக மின் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் இதனை நம்பி தங்கராஜ் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி உள்ளார்.
ஆனால் மின்சாரம் துண்டிக்கப்படாத காரணத்தால் மின்சாரம் தாங்கி டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார் இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இதன் காரணமாக தங்கராஜ் உயிரிழப்பிற்கு மின் ஊழியர்களே காரணம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மாடப்பள்ளி பகுதியில் திருப்பத்தூர் வழியாக ஆலங்காயம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தற்போது மாடப்பள்ளி கூட்ரோடு பகுதியில்தமிழ் ராஜ்யின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் எனவும் உறவினர்கள் தெரிவித்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகின்றது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment