இதனால் பள்ளிக்கு அருகில் ஒரு வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையிடம் கோரிக்கை வைத்தனர், பொதுமக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் தார் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை ஏற்க மறுத்து வேகத்தடை அமைக்க முடியாது எனக் கூறியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் திருப்பத்தூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment