திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தர்மபுரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மேஸ்ட்ரோ தமிழ் கலைக்கூடத்தில் ஏலகிரி பாரதி தமிழ் சங்கம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் வழக்கறிஞர் தேவகுமார் தலைமை வகித்தார், மேலும் ஏலகிரி பாரதி சங்கத்தின் நூல் ஆசிரியர் தமிழ்மணி அவர்களின் பணி நிறைவு பெற்றதின் காரணமாக தமிழ்மணியால் எழுதப்பட்ட நூல் மற்றும் அவர் முகம் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் தாள்கள் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏலகிரி பாரதி தமிழ் சங்கத்தின் புரவலர் தாமோதரன் மற்றும் கார்த்திகேயன் முன்னிலை வைத்தனர். மேலும் சித்த மருத்துவர் விக்ரம் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment