திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இருணாபட்டு பகுதியைச் சார்ந்த கிருஷ்ணன் மகன் ஏழுமலை (31) இவர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் காப்பு காட்டில் வனவிலங்கு வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ்கிடிஜாலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மேலும் அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் வானக அலுவலர் பிரபு ஏழுமலை வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவருடைய வீட்டில் நாட்டு துப்பாக்கி, மான்கொம்புகள், மற்றும் நாட்டுத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் வெட்டுக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஏழுமலை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment