நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி துவக்க பட்ட நாளை கொண்டாடிய பாஜகவினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 April 2023

நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி துவக்க பட்ட நாளை கொண்டாடிய பாஜகவினர்.


பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. 

மேலும் பாஜக கட்சி இன்று தொடங்கப்பட்ட நாளான இன்று திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் குருசேவ் தலைமையில் நாட்டறம்ள்ளி பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி  கொண்டாடினர். 



இந்த கொண்டாட்டத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர் குருசேவ் பேசுகையில் உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். சாதாரண வார்டு கவுன்சிலரில் இருந்து மதிய அமைச்சர் வரை பாரதிய ஜனதா கட்சி பெருபான்மையாக உள்ளது.  அடுத்த ஆட்சியும் மத்திய அரசு மோடி தலைமையிலான ஆட்சி தான் அமைக்க இருக்கிறது என்றும் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/