திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட தனியார் 188 பள்ளிகளின் 475 வாகனங்களின் தனியார் பள்ளி பேருந்துகளின் ஆண்டு ஆய்வினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார், அப்போது பஸ் தீப்பிடித்தால் எவ்வாறு கையாள வேண்டும் மேலும் பேருந்து ஓட்டுனர்களுக்கு முறையாக பள்ளி குழந்தைகளை பேருந்தில் எவ்வாறு ஏற்றிச் செல்ல வேண்டும். பெண் குழந்தைகளை ஏற்றும்பொழுது குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும்.

மேலும் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தால் மேலும் முறையாக உள்ள பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் லட்சுமி திருப்பத்தூர் வட்டாரப் மோட்டார வாகன அலுவலர் காளியப்பன் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளியின் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment