திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய்த்துறை அலுவலகம் எதிரில் மாலை 5மணியளவில் தொழிலாளர் விடுதலை முன்னனி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆம்பூர் TAW ஷு தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வுரிமையைக் காக்க வலியுறுத்தி மாவட்ட அமைப்பாளர் மு.நாகப்பன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாடத்தில் பல்வேறு காரணங்கள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வெ.அர்ஜூனன் கண்டன உரையாற்றினார். சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் க.கார்த்திக் சட்டவிளக்க உரையாற்றினார்.
மற்றும் மருத்துவ அணி மாநில செயலாளர் Dr.சு.ஞானசேகரன், வி.சி.க மாநில துணை செயலாளர் சி.ஓம்பிரகாஷ், ஆம்பூர் தொகுதி செயலாளர் மா.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்ட முடிவில் பொருளாளர் V.வேலாயுதம் நன்றியுரையாற்றினார்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கவுதம் கார்த்திக்.

No comments:
Post a Comment