திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் வக்கில் ஐயர் தோப்பு கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா, ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 350-க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி,வேலூர், உள்ளிட்ட மாவட்ட பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட காளையர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த எருது விடும் திருவிழாவில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய் மற்றும் 51 பரிசுகள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் கந்திலி போலீசார் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment