அதன்பின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு மஞ்சப்பை கொடுத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அந்த உறுதி மொழியில் ஒரு முறையை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் இந்த தகவல்களை வீட்டிலும் உறவினர்களிடமும் நண்பர்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்


மழை நீரை பூமிக்குள் செல்ல தடையாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவேன் எனவும் உறுதி கூறுகிறேன் என உறுதிமொழியை ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் வேலு இயற்கை மீட்பு அறக்கட்டளை,நம் மக்களின் குரல் அறக்கட்டளை, ஏணிப்படிகள் அறக்கட்டளை உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment