
இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உரிய விசாரணையின்றி ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர், மேலும், கிராமத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி ஊர் கவுண்டர் ரமேஷ் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்ட கூறினார்கள்.
இதனால் வீட்டிற்கு செல்ல முடியாமல் குடும்பத்துடன் நாங்கள் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு மாதமாக தங்கி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை அதனால் அவர்களின் சொத்தை அபகரிக்கவே இதுபோன்று செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர தான் செய்கிறது. சம்பந்தப்பட்ட வர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment