சண்டியூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலத்தரகர்! நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 May 2023

சண்டியூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலத்தரகர்! நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு மகன் பழனிசாமி (45) இவர் நிலத்தரகராக உள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற பெண்ணுடன் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சண்டியூர் பகுதி தேசிய நெடுஞ்சாலை சாலையின் ஓரத்தில் மர்மமான முறையில் பழனிசாமி இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையின் ஓரத்தில் ஆண் சடலம் இருப்பதாக  நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் எவரேனும் அடித்துப் போட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மர்மமான முறையில் நிலத்தரகர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/