திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமசந்திர புரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (22). இவருக்கு திருமணம் ஆகி 9 மாத குழந்தை உள்ள நிலையில், கனகராஜ் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் லட்சுமி என்பவர் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டிட பணியில் ஈடுப்பட்டிருந்தார்.
அப்போது கனகராஜ் கட்டிடத்தின் மேல் பகுதியில் பணிகளை முடித்து விட்டு கீழே இறங்க முயன்ற போது வீட்டின் மேல் பகுதியில் தாழ்வாக சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது கனகராஜின் கை தவறுதலாக பட்டவுடன் உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல்துறையினர் கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.
- ஆம்பூர் தாலுக்கா செய்தியாளர் கவுதம் கார்த்திக்

No comments:
Post a Comment