திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் பழனி இவர் சில வருடங்களுக்கு முன்பு புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார் இந்த நிலையில் திடீரென ஏலச்சீட்டு அனைத்தையும் ஏமாற்றிவிட்டு திருப்பத்தூரில் செட்டில் ஆகியுள்ளார், இதன் காரணமாக இன்று புதுப்பேட்டை பகுதி ராஜா வீதி தெரு பகுதியில் உள்ள திருநாராயணசாமி திருக்கோவிலுக்கு பழனி அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்த ஊர் பொதுமக்கள் திருப்பத்தூர் வழியாக வெலக்கல்நாத்தம் செல்லும் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அறங்காவலர் பதவியில் இருந்து பழனி நீக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் நாட்டறம்பள்ளி காவல்துறையினர் மற்றும் தாசில்தார் குமார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment