திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டியில் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
மனுவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும், வகுப்புகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் பெரிதும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே படித்து முடித்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்காமல் பல ஆண்டுகளாக அலை கழித்து வருகின்றனர் என்றும் தாங்கள் எந்த பணிக்கும் செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் தங்களிடம் அதிக பணம் பெற்று இதுவரை எந்த சான்றிதழும் வழங்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எங்கள் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொள்ளவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment