திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப. அவர்கள் பொது மக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனை பிறப்பித்தார் மேலும் வேளாண்மைத்துறை, காவல்துறை, வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.

No comments:
Post a Comment