வாணியம்பாடி அருகே ஒரு பாக்கெட் சாராயம் வாங்கினால் ஒரு பாக்கெட் சாராயம் இலவசம், இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கினால் ஒரு அவியல் முட்டை இலவசம் என்று போட்டா போட்டி போட்டு கள்ளச் சாராய விற்பனை.
வாணியம்பாடி, தமிழக அரசு டாஸ்மாக் மூலம் தமிழக முழுவதும் மதுபான விற்பனை செய்து வருகிறது. இதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதனை விற்பனை செய்வதும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மூலமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஈச்சம்பட்டு கிராமம் மலையடி ஓரத்தில் இரண்டு கடைகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. அதில் ஒரு கடையில் ஒரு பாக்கெட் சாராயம் வாங்கினால் ஒரு பாக்கெட் சாராயம் இலவசம் என்று விற்கப்படுகிறது, மற்றொரு கடையில் இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கினால் அவியல் முட்டை இலவசம் என்று போட்டா போட்டி போட்டு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் வாணியம்பாடியில் அமைந்துள்ளது இருப்பினும் வாணியம்பாடி மிக அருகில் உள்ள கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை போட்டோ போட்டி கொண்டு விற்பனை செய்து வருவது மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சாராய விற்பனை குறித்து தெரிந்தும் தெரியாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் கள்ளச்சாராயம் விற்பனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கும் பாரு கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் சார்பில் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
- ஆம்பூர் தாலுக்கா செய்தியாளர் கௌதம் கார்த்திக்

No comments:
Post a Comment