அரங்கல்துருகம் கிராமத்தில் நடைப்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 May 2023

அரங்கல்துருகம் கிராமத்தில் நடைப்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம், அரங்கல்துருகம் கிராமத்தில் நடைப்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் சாந்திசீனிவாசன், மாதனூர் ஒன்றிய குழுத்தலைவர் ப.ச.சுரேஷ்குமார், மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள்  கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/