டெபிட் கார்டு மூலம் இழந்த பணத்தை உடனடியாக மீட்டுத் தந்த காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

டெபிட் கார்டு மூலம் இழந்த பணத்தை உடனடியாக மீட்டுத் தந்த காவல் கண்காணிப்பாளர்.


திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பள்ளி கிராமம் கிருஷ்ணாபுரம் வட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கடந்த 17.05.2023 அன்று டாட்டா கேப்பிட்டல் லோன் சம்பந்தமாக தொடர்பு கொண்டு தங்களுக்கு  Personal Loan  Eligible ஆக இருப்பதாக  பேசியதாகவும் அதை நம்பி பிரகாஷ் தன்னுடைய டெபிட் கார்டு எண், மற்றும் OTP ஐ எதிரில் பேசிய நபரிடம் கூறியவுடன் தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 51,245 ஆன்லைன் மூலம் இழந்துள்ளார். 


என்ன செய்வது என்று தெரியாமல் உடனே சைபர் கிரைம் உதவி எண் 1930 ஐ தொடர்பு கொண்டு பணம் பறிபோனது சம்பந்தமாக  புகார் அளித்தார். புகார் அளித்ததன்  பேரில்  திருப்பத்தூர்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கொண்ட  குழுவினர் வழக்கு பதிவு செய்து மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூபாய் 51,245 -பணத்தை மீட்டு (29.03.2023) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்.IPS பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம் நேரில் ஒப்படைக்கப்பட்டது.


- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/