கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் வேன் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்க கோவிலுக்கு குடும்ப சுற்றுல்லா வந்துள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு வேலி மீது மோதி சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 13 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வேனை கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து குறித்து நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.

No comments:
Post a Comment