திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்பில் புதிய நுழைவு வாயில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதனை இன்று வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டுமான பணிகளையும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார், இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment