திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி கிராமத்தில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலுவின் மகன் கம்பன் அவர்கள் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது

அப்போது பேசிய கம்பன் திமுக அரசு மகளிர்க்கு கொடுத்த சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார், மேலும் பகுதி மக்கள் எப்போதும் திமுக அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் பேசினார், மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர் மோகன், பொறுப்பாளர் மோகன்ராஜ், பேரணாம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் குலோத்துங்கன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தசரதன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment