திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார் அவர்கள் தலைமையில் புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்களும், திமுக தலைமைக் கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இக்கூட்டத்தில் மு.மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கே.சாம்மண்ணன், சத்தியநாராயணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், மாவட்ட கவுன்சிலர் ஜெயாசுந்தரேசன், சிந்துஜா, மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், திமுக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகவினர் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment