மதுவிலக்கு சோதனையில் ஒரே நாளில் 07 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

மதுவிலக்கு சோதனையில் ஒரே நாளில் 07 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.


திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்.IPS உத்தரவின்பேரில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தோடு மதுவிலக்கு வேட்டை 03.06.2023-ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடத்திய மதுவிலக்கு சோதனையில் மொத்தம் 07 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ப இதில் 85 லிட்டர் கள்ளச்சாராயம், 3 லிட்டர் IMFL மது பாட்டில்களும், 70 லிட்டர் சாராய ஊரலும், 58 லிட்டர் கர்நாடக மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 07 எதிரிகளை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் சுள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்..IPS தெரிவித்துள்ளார்.


- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக் 

No comments:

Post a Comment

Post Top Ad

*/