கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா; MLA மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா; MLA மாலை அணிவித்து மரியாதை.


முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு  திருப்பத்தூர் நகர திமுக சார்பில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மற்றும் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 



அதனைதொடர்ந்து கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள்  ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, திமுகவின் மாவட்ட துணை செயலாளர்கள் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.ராஜமாணிக்கம், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கிதாவெங்கடேசன், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே.முருகேசன், கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர்கள் சு.அரசு, டி.ரகுநாத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், திருப்பத்தூர் நகர மன்ற துணைத்தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/