ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கண்ணன் மணிகண்டன் பாலாஜி ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ரயிலில் ஏதேனும் கடத்தி வரப்படுகிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விசாகப்பட்டினம் கொல்லம் சிறப்பு ரயில் பரிசோதனை செய்ததில் கழிவறை முன்பு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த நபர் பிடித்து விசாரிக்கும் போது அவரிடம் இருந்த டிராவல் பேக்கில் மூன்று பண்டல்களில் சுமார் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.


மேலும் அந்த நபர் கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்த பாவடெப்ப பீமப்பா பெலகல் வயது 29 என்பது தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்தும் கஞ்சாவை பறிமுதல் செய்தும் ஜோலார்பேட்டை இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment