திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சு பள்ளிப்பட்டு மற்றும் ஆதியூர் ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் (2022-23) கீழ், 1) TNHB PHASE II சாலையில் 1.6km நீளத்திற்கு தார் சாலை அமைத்திட சுமார் 38.48 லட்சம் மதிப்பீட்டில் பணியையும், 2) மொளகரம்பட்டி முதல் கீழ்குரும்பர் தெரு வரை 1 km நீளத்திற்கு தார் சாலை அமைத்திட சுமார் 29.80 லட்சம் மதிப்பீட்டில் பணியையும், 3) ஆதியூர் முதல் தங்கபுரம் சாலை வரை 400m நீளத்திற்கு தார் சாலை அமைத்திட சுமார் 12.66 லட்சம் மதிப்பீட்டில் பணியையும், 4) மின் நகர் பகுதியில் KT ரோடு முதல் EB நகர் வரை 450m நீளத்திற்கு தார் சாலை அமைத்திட 14.54 மதிப்பீட்டில் பணியையும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இ ஆ ப தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு, உதவி பொறியாளர் சரவணன், கந்திலி ஒன்றிய செயலாளர்கள் கே ஏ குணசேகரன்,கே முருகேசன், கே எஸ் ஏ மோகன்ராஜ், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் ஜி மோகன் குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர் தசரதன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அன்பழகன், அவைத்தலைவர் ஜெகதீசன், துணை செயலாளர்கள் ஆசிரியர் சண்முகம், தீபா வெங்கடேசன், பொருளாளர் சின்ராஜ்,மாவட்ட பிரதிநிதி சசி, ஆதியூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ பி பழனிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி, பாலு, சரவணன், குமார், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment