திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியிலிருந்து ஓட்டல் வரை ஊரக சாலை உள்ளது. இன்று மாலை பலத்த காற்று வீசியதால் மின்கம்பி ஒன்று அருந்து சாலையிலேயே விழுந்தது. மாலை நேரம் என்பதாலும், நகரப் பகுதிக்கு பணிக்கு சென்றவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்பும் நேரம் என்பதாலும் உடனடியாக சின்னவரிகம் இளநிலை மின் பொறியாளர் ஜோதிக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
சின்னவரிகம் இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை


No comments:
Post a Comment