திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 12000 மரக்கன்றுகள் நடும்விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2023

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 12000 மரக்கன்றுகள் நடும்விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஷமங்கலம் ஊராட்சி பகுதியில் விஷமங்களத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.


கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக நெடுஞ்சாலை துறையின் முக்கிய சலைகளான திருப்பத்தூர், தர்மபுரி, நாற்றம்பள்ளி, ஆலங்காயம், ஆசனாம்பட்டு, ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 12000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதன் தொடர்ச்சியாக இன்று முதற்கட்ட நடவடிக்கையாக விஷமங்களம் பகுதியில் 450 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலும் இன்று மட்டும் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி உதவி கோட்ட பொறியாளர் மணிரத்தினம் பொறியாளர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுசர் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/