திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா தோட்டி குட்டை கிராமத்தில் வேலூர் மலை கோயில் ஸ்ரீபுரம் தவத்திரு ஸ்ரீ சத்தியமா அவர்களின் நல்லாசியோடு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சஞ்சீவி மயில்மலை முருகன் ஆலய அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக திருவிழாவில் மங்கல இசை, விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, வாஸ்து சாந்தி, தனபூஜை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


இதனைத்தொடர்ந்து கணபதி சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கலசங்கள் ஊர்வலம் எடுத்து செல்லப்பட்டன. மேலும் கோபுர காலசத்தின் மீது தீப ஆராதனை செய்யப்பட்டு மலர் தூவி புனித நீர் ஊற்றி பின்பு பக்தர்கள் மீது தெளித்தனர் பின்னர் பக்தர்கள் அரோகரா என்று முழக்கங்கள் எழுப்பி கோபுர கலசத்தின் மீதிருந்து தெளிக்கப்பட்ட புனித நீரை வாங்கி தரிசனம் பெற்று சென்றனர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment