நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் பசலி 1432- அனைத்து துறை சிறந்த மனுக்கள் பெறப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 June 2023

நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் பசலி 1432- அனைத்து துறை சிறந்த மனுக்கள் பெறப்பட்டது.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் கொத்தூர் முதல் திரியாலம் வரையிலான 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் அனைத்து விதமான மனுக்கள் பெறப்பட்டு மூன்று நாட்களுக்கு பரிசீலிக்கப்பட்டு அனைத்து  விதமான மனக்களுக்கும் தீர்வு காணப்படும்.  

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். வட்டாட்சியர் குமார் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும்  கலந்து கொண்டனர், பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த சிறப்பு மனுநீதி முகாமை பயன்படுத்தி பட்டா மாறுதல்,  சிறு குறு விவசாய சான்று அனைத்து விதமான சான்றிதழ்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:

Post a Comment

Post Top Ad

*/