மது போதையில் மோதல்‌ ஒருவர் அடித்துக் கொலை ஆம்பூரில் பரபரப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 June 2023

மது போதையில் மோதல்‌ ஒருவர் அடித்துக் கொலை ஆம்பூரில் பரபரப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆயிஷா பீ நகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்லாபகஷ் இவர் நேற்று நள்ளிரவு மாங்காய் தோப்பு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ரெட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் அல்லாபகஷிடம் பணம் மற்றும் மது கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.



இதில், ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, அல்லாபகஷ்  அப்பகுதியிலிருந்த பாறையின் மீது மோதி படுகாயமடைந்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அல்லாபகஷின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அல்லாபகஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற ஆம்பூர் நகர காவல்துறையினர் அல்லாபகஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அல்லாபகஷை தாக்கிய இஸ்மாயில் என்பவரை கைது செய்தனர். மற்றும் சபீல், முன்னா, சுஹோல், ஜும்மா ஆகியோரையும் காவல் நிலையத்தில் விசாரணை செய்து கொண்டு இருக்கிறார்கள், இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கவுதம் கார்த்திக்

No comments:

Post a Comment

Post Top Ad

*/