இதில் பொம்மி குப்பம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களும் தங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் பெற கருத்து கேட்பு கூட்டம் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகள் பெறுதல் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது


இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை பொதுமக்களிடமிருந்து கருத்து கேட்பு மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், ஒன்றிய குழு துணை தலைவர் ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment