குருசிலாப்பட்டு அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது- 15 இருசக்கர வாகனம் பறிமுதல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 June 2023

குருசிலாப்பட்டு அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது- 15 இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான தனிப்படை உதவி ஆய்வாளர் அஜித் படையினர் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தாமலேரிமுத்தூர் அருகே  சந்தேகபடும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தபோது  அவர் கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த சுகுமாரின் மகன் பாலாஜி (20) என்பது தெரியவந்தது.  

தொடர்ந்து விசாரணை செய்தபோது ஜோலார்பேட்டை, குசிலாப்பட்டு, ஆலங்காயம், நாட்றம்பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருடியதாக ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் 15 இருசக்க வாகனமும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் காவல் துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர். பாலாஜி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:

Post a Comment

Post Top Ad

*/