இதனைத் தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் சம்பவம் குறித்து கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பிரேதத்தை கைப்பற்ற முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறுப்பினர்கள் மற்றும் பகுதி மக்கள் பிரேதத்தை எடுக்க விடாமல் விபத்து ஏற்படுத்திய வாகன ஒட்டுநறை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்து ஏற்படுத்திய வாகனத்தை அடையாளம் கண்டு ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் பிரேத்தை கைபற்றி பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விபத்து குறித்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் டிராக்டர் ஓட்டுநர் அஜீத்(25) என்பவரை போலீசார் கைது செய்தும், விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறியல் போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வாணியம்பாடியில் இருந்து ஆந்திரா மாநிலம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment