அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் கார் பறிமுதல்- போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 June 2023

அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் கார் பறிமுதல்- போலீசார் விசாரணை.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா, ஆத்தூர் குப்பம், நடு குப்பம், பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் கடை உள்ளது. இந்த குடோனை கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவர்  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  பிளாஸ்டிக் பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.  


போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி ஆய்வாளர் நாகராஜ், வட்டாட்சியர் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பூட்டை உடைத்து சோதனை செய்ததில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா  சுமார் 15 லட்சம்  மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  


கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.  இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/