திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இணை இயக்குனர் மரு.சம்பத் திடீர் என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் புறநோயாளிகள் அளிக்கப்படும் சிகிச்சை கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனைகள், ஆய்வகங்கள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார்.


மேலும் அருகில் உள்ள பள்ளியில் நடக்கும் மருத்துவ முகாமில் மாணவர்களுக்கு ஹீமோகுளோபின், கண் மற்றும் பல் சிகிச்சை போன்ற மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார். உடன் துணை இயக்குனர் சுகாதார பணிகள் T.R.செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment