டிசம்பர் -3 அமைப்பின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல சங்கம் துவக்கம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 June 2023

டிசம்பர் -3 அமைப்பின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல சங்கம் துவக்கம்.


திருப்பத்தூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் டிசம்பர் -3 அமைப்பின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல சங்க அலுவலகம் துவக்க நடைபெற்றது. விழாவிற்கு குரும்பேர் ஊராட்சி மன்ற தலைவர் ராமு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஏகே மோட்டூர்  ஊராட்சி மன்ற தலைவர் வேலு வழக்கறிஞர் அமுதானந்தன் மற்றும் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சுய தொழில் பயிற்சி உருவாக்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு  முகாம் நடத்துதல். சாதி மதம் இன வேறுபாடு பார்க்காமல் மனிதனாக மதிக்கும் மனிதநேய தன்மை உருவாக்குதல்.   தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ்யத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டுகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்தல். பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் தாலுகா அளவில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புகள் விரிவுபடுத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகம் பொருளாதார அரசியல், கல்வி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு அனைத்திலும் சம வாய்ப்பு, முழு பங்களிப்பை கிடைக்க செய்தல் போன்ற காரணங்களை முன்வைத்து இந்த சங்கம் செயல்படுவதாக தெரிவித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/