வாணியம்பாடியில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்ற நான்கு பெண்கள் கைது. நகர போலீசார் நடவடிக்கை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 June 2023

வாணியம்பாடியில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்ற நான்கு பெண்கள் கைது. நகர போலீசார் நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் நகர போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மது பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த உஷா (வயது 30), ராதிகா (வயது 35) மற்றும் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38), வளர்மதி (வயது 45), ஆகிய நான்கு பேரை கைது செய்து அவரிடம் இருந்து 30 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:

Post a Comment

Post Top Ad

*/